Feed the Fishes

Don't forget to feed the fishes by clicking over the water, coz they are hungry

Pages

Friday, August 27, 2010

பிடித்த கவிதை

என்னை மிகவும் நெகிழச்செய்த கவிதைகளில் ஒன்று, இருவர் திரைப்படதிலிருந்து (அரவிந்த்சுவாமி பேசியதேன நினைக்கிறேன்)
உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே
தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்
தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி…

பார்வையிலே சில நிமிடம்..
பயத்தோடு சில நிமிடம்..
கட்டியணைத்தப்படி கண்ணீரில் சில நிமிடம்…
இலக்கணமே பாராமல்
எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்….

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே…..

எது நியாயம்…?எது பாவம் ..?
இருவருக்கும் தோன்றவில்லை..
அது இரவா..?அது பகலா..? அதை பற்றி அறியவில்லை..!
யார் தொடங்க ? யார் முடிக்க ?
ஒரு வழியும் தோன்றவில்லை – இருவருமே
தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை

அச்சம் களைந்தேன் – ஆசையினை நீ அனைத்தாய்
ஆடை களைந்தேன் – வெட்கத்தை நீ அனைத்தாய்

கண்டத் திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரணப் படுக்கையிலும் மறக்காது கண்மணியே

1 comment:

BOOPATHY said...

//தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி…//
எண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தில் கனக்குதடி..

//(அரவிந்த்சுவாமி பேசியதேன நினைக்கிறேன்)//
அது அரவிந்த்சுவாமி பேசியதல்ல......பிரகாஷ்ராஜ் பேசிய வசனம்